வலியோடு பிரிகிறேன்....
எழுத்தில் இணைந்தேன்....
என் பேனாவுக்கு சிறகு முளைத்தது.....
மூளை புதியதாய்
பூப்படைந்தது....
ஆரிப்பரித்துச் சாடினேன்....
பூப்பறித்துச் சூடினேன்...
அகனார் கைபிடித்து
இழுத்துப் போனார்..... ரமேஷாலம்
கடலைமிட்டாய் கடிக்கக்
கொடுத்தார்...
இன்னபிற நண்பர்கள்
கடந்து சென்ற காட்டுவழி
ஒற்றையடிப் பாதை தொடர்ந்து
உலா வந்தேன்....
பணிப்பளுவில் படுத்துச்
சாயும் போதெல்லாம் பழச்
சாறு கொடுத்துத் தாலாட்டும்
இந்த தமிழிணையக் காற்று...
இன்பம்... ஆனந்தம்....
இயன்றதைப் பகர்ந்தேன்....
காது கிள்ளிய பிள்ளைக்
கண்டிப்புகளுக்கு மறுமொழிந்தேன்
பணிவோடு...
ஏளனத் தேள்கள்
விமர்சனக் கொடுக்குகளோடு
உலாவியலைந்து
சுயமரியாதைச் சங்கில்
துப்பியது விடம்.....
விடமேறிய வலியோடு
விடை பெறுகிறேன்...என்
தமிழ் சொந்தங்களே.....
சமூகத்தைக் களைஎடுங்கள்....
காதல் தானாய்ப் பெருகியோடும்....
ஒரு சாதாரண வாசகனாய்
சந்திக்கிறேன் உங்களை...
நன்றி...