தாயில்லா தெய்வம்
பாழாய்ப் போனதென்றா பூமியை
பாதுகாக்க மறந்துவிட்டீர்-இப்பொழுது
நாசம் செய்வதற்க்கா -நிலவுக்கு
விண்கலம் ஏறிப் புறப்பட்டீர் ?
அனுவுலைகள்
அங்கேயும் அமைத்திடுங்கள்!
எதிர்ப்புகள் உடன் வந்தால்
ஏதேனும் ஒரு சாமியை
எங்கிருந்தாலும் கூப்பிடுங்கள் !
முற்றாமல் பொய் சொல்லும்
நற்றமிழ் நா கொண்டோனை
விமானம் ஏற்றி அனுப்பிடுங்கள் !
வாழ்ந்து கெட்ட பூமி என்று
நான் நிலவில் நின்று பார்ப்பேனா?-இல்லை
மனிதயினம் சாகடித்த
தாயில்லா தெய்வமென்று
நிலவிடம் சொல்லி அழுவேனா ?
கையாலாகாத பிள்ளையென்று-நான்
கண்ணீர் சிந்தித் தொழுவேனா ?