வெற்றிக்கு வழி....
மெத்த படித்த (தலை)கனத்தால்
மெத்தையில் தூக்கம் வரவில்லையோ?
செத்த மனதோடு
அடுத்த பலி ஆடு நீர்தானோ?
வேலை தேடி களைத்தவரே
நாளையுள்ள நாளை மறவாதே!
பிறர்கையில் உன் கையை கொடுக்காதே
உன் கையில் பல உதவி செய்ய
நம்பி(க்)கையோடு போராடு!
வீர வசனம் பேசியது போதும்
சுர சம்ஹாரத்தில் நடித்தது போதும்
சாரல் நின்ற பின் குடை எதற்கு?
பூட்டிய கதவின் முன் படை எதற்கு?
நீ நம்பி(க்)கையுடன் நடை நடத்து!
வானமே உனக்கு பாலம் போடும்
வெற்றிக்கு செல்லும் வழியில்!!!!