இயற்கையின் மடியில்
பசுமை போர்த்த
மரகதம் போல்
மலையின் ராணி மேனி ,
அந்த அழகு மேனிதழுவி
மேகக்கூட்டம் வெள்ளி
ஆடைபோர்த்தும் .
அந்த எழில்வனப்பு
காண தென்றலது
அன்னநடை பயிலும் .
அந்த நடையில்
மரங்களெல்லாம்
தங்கள் தலைகள் சீவித்
தடவிப்பார்க்கும் .
தலைகள் சாய்ந்து ,
சேர்ந்தசையும்
மலர் வனங்கள் ,
கொள்ளை அழகில்
மிளிரும்!
மலர்ந்து நிற்கும்
மலரினுள்ளே
முரலும் வண்டு
தம் பசிதனையாற்றும்.
அந்த வண்டினத்தின்
சுற்றுலாவில்,
வனவளங்கள் பெருகும்.
தென்றல் நடையில்
பூவின் தலையில்
புலன்களெல்லாம்
புதுநாதம் மீட்டும்
இந்த நிலை இன்னும் நீள
எந்த மனமும் ஏங்கும் .
இந்த இயற்கையன்னை
இடையில் தவழ நினைக்கும்
நம் குழந்தை மனதில்
உற்சாகம் பொங்கும்...!
******************************************