பிரியாத வரம் வேண்டும் ..

என் காதலையும்
அவள் கைகுட்டையோடு
எடுத்துப்போன ரயிலே ...

திரும்பி வராத
அவள் முகம் காண ..
தினமும் அலைகிறேன்
நடை மேடையில் ...

ரணமா ..பிணமா..?
எது என் நிலை !
நரகமா.. சொர்க்கமா
எது என் நிலம் !!

கண்ணீரா.. கவிதையா..
எது என் சொத்து ..??

புது டில்லி போனவளை ...
ஒருவார விடுமுறை முடித்து
விரைந்து கூட்டிவா ரயிலே ....!

அவள் இல்லாத ஊரில்
சிரிக்க மட்டுமல்ல .. காற்றை
சுவாசிக்க கூட
பிடிக்கவில்லை எனக்கு ...!!!

எழுதியவர் : அபிரேகா (20-Jan-13, 3:00 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 78

மேலே