அன்னை

உன் கருவில் உதித்த என்னை
உன் உலகம் என நினைத்தாய்.....!
நான் உன்னை உதறிய பொழுதும்
என்னை உன் உயிராய் நினைத்தாய்.....!
நான் உன்னை விட்டு விலகிய பொழுதும்
என் நிழலாய் என்னுடன் வந்தாய் .....!
நீ உயிருடன் இருந்த வரை
நான் உன்னை மதிக்கவில்லை ....!
உன் உயிர் போன பின்பு என்னை
எவரும் மதிக்கவில்லை ......!
உன் அருமை அறிந்த இப்பொழுது
உயிர் வாழ பிடிக்கவில்லை .......!
உன் அருகாமையில் இருந்திட
ஏங்குகிறேன் என்னை ஏற்றுக்கொள்
என் அன்னையே........!

எழுதியவர் : ஷண்முகப்ரியா.சே (20-Jan-13, 7:53 pm)
Tanglish : annai
பார்வை : 197

மேலே