மாற்றானின் மனைவியாகுமுன்
நீ தீண்டி போன
என் விரல் நுனிகள்
அடுத்தவன் ஸ்பரிசத்தில்
அருவெறுத்து போகும் ..
உன்னை உள்வாங்கி
உள்ளத்தில் பதித்த
என் கருவிழிகள்
அயலான் பார்வையில்
அனலாய் தகிக்கும் ....
நீ முத்தமிட்டு போன
என் இதழ்கள்
இன்னொருவனை
உச்சரிக்க
அச்சப்பட்டு போகும்..
நீ உச்சரித்த எனது பெயர்
இன்னொருவனின்
உச்சரிப்பில்
அச்சம் கொள்ளும்....
உன் நிழலாய்
திரிந்த எனதுயிர்
அடுத்தவனின் அக்கறையில்
அடித்துக் கொள்ளும்....
உன்னை பத்திரபடுத்திய
இதயம்
அடுத்தவனின் அதிகாரத்தை
அறவே வெறுக்கும் ....
உன் தோளில் மட்டும்
தூங்கி பழகிய நான்
மாற்றானின் தோளில்
மணமாலை சூடுமுன்
மரித்துப் போவேன் ..