சிறைக்குள் சிட்டுகள்

ஒரே போர்வைக்குள் ஐவர். .
காலத்தின் மதிப்பறியா தூக்கம். .
அவசர பல் துலக்கல்
தேநீருக்காக. .
காத்திருக்க வைக்கும்
குளியலறை. .
ஒரே கண்ணாடியில் மாறி மாறி
காட்சியாகும் ஐவரின்
பிம்பங்கள். .
உண்டும் உண்ணாமலும்
காலை உணவு. .
வகுப்பறைக்கு எடுத்து செல்ல
மறக்கும் புத்தகங்கள் . .
எழுதபடாத வீட்டு பாடங்கள். .
ஆசிரிய ஆசிரியைகளின்
கனல் கக்கும் பார்வைகள். .
விடை தெரியாது என்று தெரிந்தும்
வினவப்படும் வினாக்கள். .
உதவுகிறேன் என்ற பெயரில்
விடை தெரியாத
பத்து உதவிக்கரங்கள். .
இடைவேளைக்கு முன்னே எழும்
சலசலப்புகள். .
ஆசிரியர் வெளியேறுவதற்கு முன்னே
வெளியேறும் கால்கள். .
சிற்றுண்டி சாலையில் எழும்
அரட்டைகள். . .
அடிக்கடி தட்டு மாறும் உணவுகள். .

மீண்டும் வகுப்பறை. . .

ஆசிரியரின் தாலாட்டில்
குட்டி தூக்கம். .
மணி ஓசைக்கு காத்திருக்கும்
செவிகள். .
சிறைச்சாலை என காட்சியளிக்கும்
விடுதி. . .
தோழிகளுடன் அரட்டை. .
தொலைக்காட்சி அறை. .
சிற்றுண்டி. .
படிக்கவேண்டுமென திறக்கப்படும்
புத்தகங்கள். . .
படிக்காமலே மூடப்படும்
சோகங்கள். .
சலங்கை ஒலியை மிஞ்சும்
சிரிப்புகள். .
காற்றிலே மிதந்து வரும்
உரையாடல்கள். .
இரவு உணவு. . . !
கவனமாக கையாளப்படும்
கைப்பேசிகள் . .
மீண்டும். .
ஒரே போர்வைக்குள் ஐவர். .
நாளைய பொழுது விரைவில்
புலர்ந்து விடுமோ என்னும்
அச்சத்தில். .

இன்று எனக்கு அறுபது. .
என் குரலுக்கு செவிசாய
பேரன் பேத்திகள். .
இயந்திரத்தை இயக்கும்
பணியில்
இதயத்தை தொலைத்து
கொண்டிருக்கும் இந்த
இளைஞர்களிடம் . . .
எப்படி சொல்லி புரிய வைப்பேன். . . ?
என் இருபது வயது கல்லூரி வாழ்க்கையை . .

எழுதியவர் : கிருபா.S (20-Jan-13, 9:46 pm)
சேர்த்தது : S.KIRUBA
பார்வை : 208

மேலே