சீட்டுப்பரிசோதகன்
கருப்பு அங்கிக்குள்ளே,
மறுப்பேதுமின்றி
மறைந்தவன் .
சீட்டில்லாப் பயணியர்க்கு,
சிந்தனையில் கலக்கமூட்டும்
தண்டல் காரன்.
அங்கலைந்து,இங்கலைந்து
காலி இருக்கைக்கு ஆள்
அமர்த்தும் பொறுப்பாளி
வெள்எழுத்துக்காரனுக்கும்
நல்லிருக்கை காட்டிடுவான்.,
தன் எழுத்தோ தன்
பதவி மூப்புவரை-ஓடும்
பயணத்தில் ஓட்டமாகவே.....!
உற்றதுணையவன்
ஆனாலும்
நம் பயணம் முடிந்து
இறங்கிவிட்டால் !......
அவன் எந்த ஊர்..?
நாம் எந்தஊர்..?
அவன் யார்..?
நாம் யார் ..?