உன் நினைவிலே

உடலிலே உயிர் இருக்கும் -ஆனால்
அசைவின்றி லயித்திருக்கும் உன் நினைவிலே.....

உணவிருக்கும் பசியிருக்கும் -ஆனால்
உண்ண மனமின்றி அடம்பிடிக்கும் உன் நினைவிலே....

ஊரிருக்கும் உறவிருக்கும் -ஆனால்
தனிமையையே மனம் ரசித்திருக்கும் உன் நினைவிலே.....

என் சிந்தனையும் செயலையும்
திருடிவிட்டாய் நீ....
செய்வதறியாமல் தவிக்கிறேன் நான்...

கனவிலே வாழ்ந்து வருகிறேன்....
நிழலாய்த் தொடரும் உன் நினைவிலே...-இது
நிஐமாகும் நாள் எந்நாளோ என்று ஏங்கியபடி!!!.....

எழுதியவர் : (23-Jan-13, 10:30 pm)
சேர்த்தது : vijayalakshmi.D
பார்வை : 129

மேலே