தண்டனை
அந்த அரசியல் வாதியை எதுவும்
செய்ய முடியவில்லை
ஜனங்களின் எலும்புகளில்
தனக்கான நாற்காலியை செய்தி கொண்டார்
பொதுமக்களின் மண்டையோடுகளில்
தேனீர் பருகிக் கொண்டார்
சமாதானப் புறாக்களே
அவரின் இரவு நேர உணவுகளாயின
ஒப்பாரிகளே
அவர் ரசிக்கும் தேசியக் கீதங்களாயின
மையவாடிகள் புதைகுழிகள், பாழடைந்த
கட்டிடங்கள்
போன்றவையே
அவர் தரிசிக்கும் இடங்களாயின
இவரைத் தட்டிக் கேட்டவர் கரங்கள்
தறிக்கப்பட்டன
குரல் கொடித்தவர்களின் வாய்களுக்கு
கொள்ளிவைக்கப்பட்டன
நீதித்துறையும், பொலீஸ் துறையும்
பயம் கொண்டன
நாடே நடுக்கத்தில் இருந்த போது
ஒரு மாடு
சுவரில் ஒட்டியிருந்த படத்திலுள்ள
கழுத்தை
கடித்துக் கொண்டியிருந்தது...