என்னை அனாதை குழந்தை என்கிறார்கள் அம்மா !!!
விழிகளில் ஓர் உருவம் வழியில் நிற்கிறது வழிவிடாமல். அவ்விழியில் உன் உருவமே அம்மா !!!
எங்கே இருக்கிறாய் என்ன செய்கிறாய்.சொல்லிவிட்டு தான் சென்றாய் என நம்புகிறேன் சொன்னது என்னவென்று புரியாமல் தவிக்கிறேன் தவழும் வயதில்.எனக்கு தெரியாமொழியில் வருவேன் என்றாயா ! போகிறேன் என்றாயா ! அம்மா !!!
ஏன் அழுகிறேன் எதற்காக அழுகிறேன் என்று புரியாமல் அழுகிறேன்,விடை மட்டும் தெரிந்தது காரணம் நீ தான் அம்மா !!!
நான் என்ன தப்பு செய்தேன் துங்கும்போது தாலாட்டாமல் துங்கியப்பின்னே தாலாட்டு பாடினாயே துங்கும் விழிகளில் நின்று கொண்டு அம்மா !!!
ஏங்குகின்றேன் ஏக்கத்தால் பசி வரும் போது ஏங்கியதால் வந்த பசி கூட போனது. வேறனென்ன கேட்டுவிட்டேன் என் பசிக்கு நான் பருகும் தாய்ப்பால் தானே, நான் பருகும் போது உன் மார்பு வலிக்கும் என்று விட்டு விட்டு சென்றாயா அம்மா !!!
தவழும் போதுதான் விட்டுச்சென்றாய் நடக்கும் போதாவது கை பிடிக்க வருவாய் என்று நடக்கின்றேன் முடியாமல் தவறி தவறி விழுகின்றேன்.விழும் என்னை ஓரு முறையாவது தூக்கி முத்தம் கொடுக்க வருவாயா அம்மா !!!
உன் மடிக்காகவே காத்திருக்கின்றேன்.அம்மடிக்கு என் உரிமை இல்லையென்று விலகிச்சென்றாயா, உன் மடியில் அமரும் பாக்கியத்தை ஓரு முறை கொடுக்க வருவாயா அம்மா !!!
இவர்கள் பேசுவது ஏனோ புரியவில்லை நான் அறிந்த மொழியும் ஓன்று தான் அதுவும் அழுகை தான். அம்மொழியில் சொல்கிறேன் அம்மா இவர்கள் என்னை அனாதை குழந்தை என்கிறார்கள்.
நான் அனாதை அல்ல என்று அந்த ஓரு சொல்லை போக்க நீ வருவாயா அம்மா !!!