கமல் ....கமல் ஹாசன்...விஸ்வரூபம்...என்ற இறுதி வியாபாரம்..!
கமல் ....கமல் ஹாசன்...விஸ்வரூபம்...என்ற இறுதி வியாபாரம்..!
உலக நாயகன், ஊர் நாயகன் எந்த நாயகனின் படத்தையும் தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.
கருத்து எதுவாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் உரிமை யாருக்குமுண்டு.
விஸ்வரூபத்தின் வினியோக எதேச்சதிகாரத்தில், தியேட்டர்கள் பிடுங்கப்பட்டு, தோழர்களால் கேரளாவின் சித்தூரில் நடக்கவிருந்த 'பஞ்சன்யம்' சர்வதேச திரைப்பட விழா(ஜனவரி 26 - 31) திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.
எளியவர்களை வாழவிடாமல் செய்யும் தன்மைக்காகத் தான் படத்திற்கே அப்படியொரு பெயர் போலிருக்கிறது.
'செங்கடல்' உட்பட பல படங்களின் பிரிண்டுகள் வரவழைக்கப்பட்டு, விழா நடத்தமுடியாமல், இப்போது அவற்றையெல்லாம் பாதுகாக்கும் அல்லது திருப்பியனுப்பும் சிக்கலில் இருக்கிறார்கள் திரைப்பட இயக்கத்தினர்.
மிகச்சிறிய பட்ஜெட்டில் திரைப்பட விழா நடத்துபவர்களுக்கு, இது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம்.
கமலுக்காக நீங்கள் ஏன் உரிமைக்கொடி பிடிக்கவில்லை என்று ஏகப்பட்ட பேர் கேட்கிறீர்கள்.
சரி. கமல் என்றல்ல, எந்த கலைஞனின் கருத்து சுதந்திரத்திற்காகவும் கொடி பிடிக்க தயார் தான்.
ஆனால் கமல் தன் வியாபாரத்திற்கெல்லாம் வெளியே அப்படி யாருக்கெல்லாம் உரிமைக்கொடி பிடித்தார்?
நன்றி
அன்புத் தோழி