இனிய தோழமைகளே...!!
இனிய தோழமைகளே!
"இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்"
இன்றைய நம் தேசம் பல சீரழிவுகளில்
சிக்கித்தவிக்கிறது..
ஒதுங்கி ஓரம்நின்று வேடிக்கை பார்க்காமல்,
இறங்கி போராடுவோருக்கு ஒரு கைகொடுப்போம்..
சீரழிவுகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக நம் குரலையும் எழுப்புவோம்..
என்ன நடந்துவிடப்போகிறது என்னால்,
என்று இருப்பதைவிட,
எங்களால் ஒரு நல்லெண்ணத்துக்கான
விதை விழுகிறது என்று ஒன்றுசேர்வோம்..
இந்தியாவின் பலத்தை நிருபிப்போம்,
நல்லெண்ணங்களை பிரதிபலிப்போம்..
நம் இந்தியா மென்மேலும் வளர்ந்து செழிக்க,
நம்மால் முடிந்த ஒரு சின்ன செயலேனும் செய்வோம்..
" ஜெய்ஹிந்த் "