சில அழுக்குச்சட்டைகள்!

அந்தச் சலவைத்துறையில்
வெளுப்புக்கு வந்தன
சில அழுக்குச்சட்டைகள்

மதக்கறை பட்ட
அழுக்குச்சட்டைகள்

அவைகளில்
யார் சுத்தமென்று...?
காவிச் சட்டைகளும்
பச்சை சட்டைகளும்
பயங்கரச் சண்டைப்போட்டு
இரண்டுமே கிழிந்துபோயின

இடையில் நாட்டமை செய்த
வெள்ளைச்சட்டையோ
இருவரையும் தூண்டிவிட்டு...
கலவரத்தை கலோபரமாக்கியது

எட்டி நின்று இவர்களை
வேடிக்கைப் பார்த்தது
காக்கிச்சட்டை...

கலவரத்தின் நிறம் என்ன...?

புரிந்தும் புரியாமலும்
குழப்பத்தில் கருப்புச்சட்டை...
(மிக பலமிக்க யானையை அங்குசத்தால் அடக்கிவிடுகிறான் மனிதன் ஆனால் அதே யானைக்கு மதம் பிடித்தால் அது பாகன் என்றுகூட பார்ப்பதில்லை )

.................................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (27-Jan-13, 8:25 pm)
பார்வை : 109

மேலே