அல்லாஹ் என்பதொரு நாமம்

ஆவி துடிக்குது அல்லாஹ் -உனை
அணைக்க ஏங்குது அல்லாஹ் !

பாவம் படிந்த மனம் அல்லாஹ் -உனை
பார்க்க ஏங்குது அல்லாஹ் !

"ஸல்" என்றொரு சித்தர் -அவர்
சத்திய லோகத்தின் அரசர் !

அவர்படைத்தளித்த உயர் பொக்கிஷம் -திரு
குரான் எனும் அரபுகளின் அங்குசம் !

அரணாய் ஆனவரே அல்லாஹ் -எனது
அறிவில் வழிபவரே அல்லாஹ் !

அஹிம்சை நெறியே அல்லாஹ் -உலக
உயிர்களாய் இருப்பவரே அல்லாஹ் !

நபிகள் வாழும் இடம் மெக்கா-அவர்
அருள்மழை மதங்களுக்குள் மட்டும் நிக்கா !

மனித நேயம்தான் அவர் கோட்டை -மதியில்
தர்மம் விதைக்கும் பெரும் கோட்டை !

அல்லாஹ் என்பதொரு நாமம் -அது
அன்பெனும் ஒளியை உமிழும் ஒலிவிஞ்ஞானம்!

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (27-Jan-13, 9:04 pm)
பார்வை : 194

மேலே