அந்த இருபது நிமிட ஞான வெளியில்.....

அந்த இருபது நிமிட ஞான வெளியில்..
நான் முழு விழிப்பில் இருந்தேன்....
உறக்கத்தின் நடுவே எதோ ஓர்
அதிசய நொடியில்.....
எதோ ஒன்று எனக்குள் மலர...
அதன் பேர் தான் ஞானமோ..?
மனதின் கேள்விகளுக்கு....
அந்த ஒளியுணர்வு பதில் அளித்தது...
அக்கேள்விகளும்...அதன் பதிலாய் எனக்கு தோன்றியவையும்....இதோ....
கே:கடவுள் என்பது என்ன?
ப: உனைக் கடந்து உள் நோக்க...
நீ காணும் கடக்க முடியா பொருள் ...என்றது....
(இப்போதைய எண்ணம்) தெய்வ மொழி என்று சமஸ்க்ருதத்தை சொல்வதை விடவும் தமிழ் தான் பொருத்தம்...கடவுள் என்கிறோம்...

'கட'ந்து 'உள்'நோக்க.....
'கட'க்க முடியாமல் 'உள்'ளது.....கடவுள்...

இறைவன் என்கிறோம்...
இ +உறை+வன்....
எங்கெல்லாம் நினைக்கிறோமோ அங்கெல்லாம் உறைபவன்...வருபவன் ..என்று பொருள் படுகிறது...
அடுத்த கேள்வி.....
கே:ஏன் கடவுளை நம்ப வேண்டும்?
ப: இருட்டில் மிரளும் குழந்தைக்கு
ஆறுதலாய் வரும் அன்னையின் ..
குரல் போல...கடவுள்.
இருளில் மிரளாத குழந்தைக்கு
தாயின் குரல் தேவை இல்லை...
அது போல....
வாழ்க்கையில் மிரளாதவர்களுக்கு....
கடவுள் தேவை இல்லை...
எப்பொழுது நீங்கள் மிரள்கிறீர்களோ...
அப்போது நீங்கள் நம்பும் யாரும் கடவுளே...
அன்னையோ நண்பனோ தோழியோ...தந்தையோ..

கே:கடவுள் எங்கும் இருக்கிறார் எனில்..எதற்காக கோயில்கள்....
ப: கோயில்கள் தேவை இல்லை...கோவில் என்பது அனுபவங்களின் கூடாரம் ....அவ்வளவே.
வியாபாரத் தளம்.....அவ்வளவே...
அனுபவங்கள் அங்கே குவிந்திருக்கும்...
அதை உணருபவர்கள் கொஞ்சமே....

கே: கடவுளுக்கு உருவங்கள் இல்லையெனில்...எப்படி அடையாளம் கொள்வது...

ப: காற்றுக்கும் கூட தான் உருவங்கள் இல்லை..
சுவாசிக்கும் போதும் ...தென்றலின் போதும் அடையாளம் காண்பது போல....தானாகவே....உணர முடியும்...

கனவு கலைந்த பின்னும்....
ஞானம் உணர்ந்த பின்னும்....
மீண்டும் உலளவே விரும்புகிறேன்....
மனிதர்களோடு.....

எழுதியவர் : (28-Jan-13, 7:17 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 91

மேலே