உன்னிடம் அல்லாது யாரிடம் புலம்ப...

விட்டுக்கொடுக்க வயதில்லை...
விட்டுப் பிரிய மனமில்லை...
சேரவும் வழியில்லை...
என் நிலை கூற நீயும் இங்கு இல்லை...
தனிமையைத் துரத்தி அடிக்க
கவிதைகளை துணையாக்கிக்
கொண்டு படித்தேன்,
பாவம் அதுவும்
என்னைப் போலவே
காட்சி அளிக்கிறது...
உன்னைப் பற்றி
இல்லாத வரிகளில்
உயிரும் இல்லை ...
உணர்வும் இல்லை...
அப்போது தான் உணர்ந்தேன்
உன்னோடு இருந்த என் நாட்கள்
"கவிதை"யாய் இனித்திருக்கிறது என்பதை....