நீ வரைந்த மடல் புன்னகை இதழ்களில்

மதி வரைந்த மடல்
நீல வானின் நெஞ்சினில்
முகில் வரைந்த மடல்
வானவில் நிறங்களில்
அலைகள் வரைந்த மடல்
கடற்கரை மணல் வெளியினில்
ஆதவன் வரைந்த மடல்
அந்தி வானின் அழகினில்
தென்றல் தான் வரைந்த மடல்
தேனிதழ் பூ மலர்களில்
அன்பே
நீ வரைந்த மடல்
உன் புன்னகை இதழ்களில்
கவிந்த விழிகளின் இமைகளில்
நினைவுகள் விரிந்த என் நெஞ்சினில்....
----கவின் சாரலன்