வலியா சுகமா ??????
காதலினால் ஏற்பட்ட காயங்கள்
காத்திருக்க வைக்கிறது காலம் எல்லாம்
வலியும் சுகமும் உணர்ந்தேன்
பிரிவின் முதல் நாள் சுகம்
இன்று வலி என்றும்
நீ சொன்ன பிரிவோம் என்ற சொல்
அன்று கவிதை ஆனது இன்று கசப்பாகிறது
விளையாட்ட செய்த தவறு இன்று வினையானதென வினையின் முடிவு
பிரிவுதான
உன்னை காணா ஒவ்வொரு
நொடியும் என்னை காணாமல் போகிறேன்
உன் குரல் இனிமை
அதிலும் அழகு அதை கேட்கும் தவிப்பில்
பசியின் குழந்தை ஆனேன்
உன் தவிப்பில் கிடைகின்றேன்
தண்ணிரில் முழ்கி நீச்சல் அறிந்தும்
திக்கு முக்காடுகின்றேன்
உளறிய என் வார்த்தைகள்
உரு மாறிய உன் முக பாவனை கோபம்
கலந்த பேச்சில் பிரிவு என்ற ஒரு சொல்
அறியாமல் கூறிய வார்த்தைகள் இன்று
அறிய வைத்து விட்டன
சுகமும் வலியும் அறிந்துவிட்டேன்
சுகம் என்றால் பிரிந்திருப்பேன்
வலி என்றதால் திரும்பி வந்து இருக்கின்றேன்
உனக்குள் வினவுகிறேன் வலியா சுகமா ??????