************பணம்...பணம்...பணம்...************ ஆவாரம் பூ

பணம்...
பணம்...
பணம்.... இங்கு
குணமெல்லாம் வெறும் பிணம்...

ஒரு சான் அளவில்லாத
காகித தாளும்
கடவுளாகுது...

கட்டு கட்டா காகிதம்
காப்பு சுவருக்குள்
காப்பாற்றி வைத்தவன்
கடவுளின் கடவுளாகிறான்...

பலரை திரும்பி பார்க்க வைக்கும்...
பார்த்தவரை விழி இழக்க வைக்கும்...

பலரை பேச வைக்கும்
பேசியவரை ஊமையாக்கும்....

பணமே வாழ்க்கையாய்....
வாழ்க்கையே பணமாய்.....
பைத்தியமாய் மனிதம்....

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து
உற்று அறியும் ஐம்புலனும்...
பெண்ணிலும்,
பொன்னிலும்,
பணத்திலும்....

***ஆவாரம் பூ***

எழுதியவர் : ஆவாரம் பூ (31-Jan-13, 11:10 pm)
சேர்த்தது : ஆவாரம் பூ
பார்வை : 297

மேலே