கடல் ஏன் உப்பு?
![](https://eluthu.com/images/loading.gif)
நன்னீர் சேர்ந்த
கடல்
உப்பாம்....
ஏன்?
அலைகள் அடித்து
வலியால் பொங்கும்
கண்ணீர் நுரையாலோ!.
இல்லை,
ஓடி வந்த
உனக்கு என்குலமா
என்றிட்ட சண்டையில்
மாண்ட உயிர்
ஈன்ற குருதியை
சுமப்பதினலோ!.
இல்லை,
விண் ஈன்று
ஒன்றிணைந்தோம்
கண் பொங்கி
பிரிவை கருத்தரித்ததாலோ?
எதுவோ கடல் உப்பாம்.......