மனிதம் எங்கே ?

என்ன இல்லை இந்தியாவில்
குறு சிறு தொழிலும் பன்னாட்டு
வணிகமும் பாரம்பரிய பழக்கமும்
அறிவுச் சோலையும் அணுமின்
நிலையமும் ஆயுத படைகளும்
அன்பும் அழகும் ஆயிரமும்
அள்ளித தருகிற அன்னையும்
ஊற்றி பொழிகிற தந்தையும்
சுற்றி திரிகிற சுதந்திரமும்
என்ன இல்லை இந்தியாவில்
ஏன் இங்கு இந்த நிலை ?
கண்டவர்கள் கண்டனம் செய்வதும்
போக்கற்றவன் போராட்டம் புரிவதும்
அறிவிலியின் ஆர்ப்பாட்டம் பேதையின்
பினகள் தீவிரம் தெருவிலும்
கொலைகள் கொள்ளைகள் நடுவிலும்
அச்சமும் நடுக்கமும் அகத்திலும்
பொய்யும் புரட்டும் சூழலிலே
ஏன் இங்கு இந்த நிலை
மனிதா மனிதம் எங்கே ?

எழுதியவர் : வீரா ஓவியா (1-Feb-13, 1:13 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 135

மேலே