வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

தமிழ் சகோதர சகோதரிகள்
சாகக் காரணம் தமிழ்...

எங்களுக்கு உயிரை விட
மானம் பெரிது
எங்கள் மானத்தை விட
எங்கள்
தமிழ் பெரிது...

அற்பம் என்று எண்ணி
எங்கள் அற்புதக் குலத்தை
சுட்டு வீழ்த்திவிடலாம்
என்று எண்ணிவிட்டாய்.

உன் எண்ணங்கள்
பலிக்க வில்லை
உன் கனவுகள்
மெய்ப் பட போவதும் இல்லை

ஆயிரம் உயிர்கள் பிரிந்த
உன் நாட்டில்
ஆயுதம் கொண்டு உன்னை
கொல்லமாட்டோம் ...
ஆனால் அரக்கனே
உன் சாவு
இவ்வுலகம் நடுங்கும் படி இருக்கும்!

நாங்கள் தமிழனம் தான்...
உன்னைப் போல
கோழை இனம் அல்ல.
இவ்வுலகிற்கு வீரத்தை சொல்லியதும்
எம் குலம் தான்
இனி சொல்லிக் கொடுக்கப் போவதும்
எம் குலம் தான்!

ஒரு தமிழன் போதும்
இவ்வுலகில் தமிழ் நிலைத்திருக்க..
என் இனம் தமிழ் இனம்
எங்களுக்கு உயிரும் ஓன்று தான்
எங்கள் தமிழும் ஓன்று தான்!

எனவே தான்
என் சகோதர சகோதிரிகள்
உயிரை விட்டனரே அன்றி
தமிழை விட வில்லை !
தமிழை விடவும் மாட்டோம்!
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

எழுதியவர் : விக்கி (1-Feb-13, 6:00 pm)
பார்வை : 1414

மேலே