புன்முறுவல்

புன்முறுவல்
உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும்.
புன்முறுவல்
உங்கள் இயல்பினில் இனிமை சேர்க்கும்.
புன்முறுவல்
உங்கள் இதழுக்கு இதமாய் இருக்கும்.
புன்முறுவல்
உங்கள் உள்ளத்தில் உவகை ஊட்டும்.
புன்முறுவல்
உங்கள் முயற்சியில் அயர்ச்சி நீக்கும்.
புன்முறுவல்
உங்கள் கவர்ச்சிக்கு கவர்ச்சி கூட்டும்.
புன்முறுவல்
உங்கள் கைகளில் உலகையே கொணரும்.
புன்முறுவல்
உங்கள் முகத்தினில் முழுநிலவைக் காட்டும்.

எனவே எப்போதும் முறுவலித்து இருங்கள்,
என் இனிய நண்பர்களே!
பாலு குருசுவாமி

எழுதியவர் : (11-Nov-10, 7:39 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 496

மேலே