மாணவருக்கு
ஏழாம் வகுப்பில் பார்த்த முகம்
பழகிய முகம்
எமக்கு பண்பட்ட முகம்
படிக்கும் தருணத்தில்
படிப்போர் சிலர்
படிக்கும் புத்தகத்தில் படம் பார்ப்போர் பலர்
புத்தருக்கு பொதி மரத்தடியில் ஞானம் கிட்டியது
எமது மாணவருக்கு மாடிப்படியில் பாடம் கிட்டியது
அண்ணன் எப்ப போவான்
திணை எப்ப காலியாகும் என
கரத்தில் கட்டிய கைகடிகாரத்தை
காவல்காரன் போல்
கண்ணிமைக்காது பார்க்கும் பார்வை .
இடைவேளை ஒலிக்காய் காத்திருந்த மனம்
இசைவு கிட்டினால்
உடனே வகுப்பறை புறக்கணிப்பு
அழைப்பு மணி அடித்தால் மட்டும்
காது கேட்காத செவிடராகி விடுவார்
வீடு வெள்ளை அடிப்பான்
ஒரே பகுதில் அடித்து
நாளிகையை விண்ணடிப்பது போல்
படித்த பாடத்தை பலமுறை பதம் பார்ப்பான்
என்னை ஏமாற்றுவதால் என்று எண்ணி
உன்னையே ஏமாற்றிக் கொள்வாய்
உன்கால் உதைப்பட்டு கதறி அழுத
பந்தின் அழுகுரல் ஓயவில்லை
உமது ஓரக்காதுகளால் ஒத்திகைபார் .
அப்பந்தின் கூக்குரல் கேட்டு
ஆறுதல் சொன்னேன் .
கவலை வேண்டாம்
இன்னும் ஓரிரு வாரம் பொறுத்துக்கொள்
தேர்வெழுதி சென்றுவிடுவார்கள் என்றேன்
அப்பந்து மீண்டும் வருவார்கள்
பதினோறாம் வகுப்பிற்கு என்றது
உமது பயம்மறிந்து.
கல்லையே காலால் பதம்பார்க்கும் உனக்கு
கால்பந்தில் கரம் உடைந்தது ஏனோ .
விளையாட்டில் மட்டும் வீண்ணார்வம் வேண்டாம்
கல்விமீதும் உமது கருத்தைக் கொள்
இறந்தக் காலத்தை எண்ணி ஏமாறாதே
எதிர்க்காலத்தை எண்ணி ஏமாறாதே
நிகழ்க்காலத்தை மட்டும்
உமது நிந்தையில்
உமது சிந்தையில் நிறுத்து
கசடற கல்
வாழ்வில் என்றும் கண்ணியமாய் நில் .
இளையகவி