அப்படியென்றால் இன்றைக்கு நிலா வராதா?

பேசிக்கொண்டே
இருந்தோம்..
சரி சாப்பிட்டுவிட்டு வா!
நேரமாயிற்று..
நானும் சாப்பிடப்போகிறேன்.

இன்று விரதம் வேறு
என்றாள் தோழி..

அப்படியா?
இன்றென்ன விரதம்
வினவினேன் நான்...!

தெரியாதா?
இன்று அமாவாசை
என்றாள்..!!

அப்படியென்றால் நிலா
வராதா ?

வெகுளியாய்
நான் கேட்க..!!

முறைத்துக்கொண்டே
அதான் நான் வந்துவிட்டேன்ல
போய் ஒழுங்கா சாப்பிட்றா!
என தலையில்
குட்டினால்...!

எங்கோ பௌர்ணமி
பிறை விட்டிருக்கும்..!

-கவிதைக்காரன்!

எழுதியவர் : -கவிதைக்காரன்! (4-Feb-13, 3:35 am)
பார்வை : 358

மேலே