((((((((((வண்ணம் கொண்ட வானவில் ))))))))))
![](https://eluthu.com/images/loading.gif)
கருமேகக் சுவற்றில்
ஆதவன் வரைந்த
அபூர்வ சித்திரமே ......!!!
பிஞ்சுகளின் உள்ளத்தைப்
பூரிக்க வைக்கும்
வண்ணத்துப் பூசியே ....!!!
அற்புத ஓவியனுக்கும்
கிட்டாத வண்ணக் குவியலே
வான் மழையின் சேயே....!!!
உன் தாயின் வருகைக்கு
வண்ணக் கொடியசைத்து
வரவேற் புரையற்று கிறோம் ....!!!
தாயின் தலைமையுரை தணிந்தபின்
நிறைவுரையாற்ற நீலவானில்
வண்ணக் கோலமிடுகிராய்.....!!!
பின் வண்ணங்களை மறைகின்றாய்
என் உவகை எண்ணம்
குலைக்கின்றாய் ....!!!!
மீண்டும் ஒரு மாரிகாலத்தில்
உதயன் உறங்காதவேளை
நீ உதிப்பாய் ....!!!
அதுவரை உனக்காக
நான் காத்திருப்பேன்
என் பாலை நிலத்தில் ....!!!!