சுமைகள் இரண்டு

சுமந்திடும் சுமைகள் இரண்டு
பாசத்தால் சுமப்பது ஒன்று
வாழ்ந்திட சுமப்பது மற்றொன்று !

அயர்ந்து உறங்கிடும் மழலை
அயராது அலைந்திடும் அன்னை
அன்றாடக் காயச்சியின் நிலைமை

சுற்றித் திரிவதே வாடிக்கை
விற்றுத் தீர்ந்தால் கடந்திடும்
அன்றைய நாளின் வாழ்க்கை !

நித்தம் நடந்திடும் பொறுமை
நின்றால் கொன்றிடும் வறுமை
நிச்சயம் வென்றிடும் வெறுமை !

கண்டிடும் காட்சி அவர்நிலை
வாட்டிடும் பசியின் அவலநிலை
தொட்டிடும் பொறுமையின் எல்லை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Feb-13, 10:03 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 130

மேலே