உலக மகா பிரசித்தம்
உலக மகா பிரசித்தம் ..தமிழன் விழா ..
பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் பச்சரிசியும்
பருவத்திலே தெம்பாக ஊட்டி வளர்ப்பார் ..
பயிற்சிகளும் சண்டைகளும் பிரசித்தம் ..
பயிற்றுவித்து மகிழ்வர் ...!
மனித பொம்மை செய்து
மனிதனென குத்திக் கிழிக்கும்
சின்னபின்னம்மாகச் சரியும் ஊண் உயிர் செந்நீர்கள்... !
பழகிவிடத் துடிக்கும் திமில்கள்
சிவப்பு நிறத்தில் இனிப்புக் கலவை
சிவப்பு கலவை வெளியே வரவைத்து
இனிப்பு சுவை என ரசித்து சுவைக்கும் ...!
ஜல்லிக் கட்டு களத்திலே பயிற்சிபெற்ற தன்னை அடக்கவரும் வீர காளைகளை...
ஜல்லிக் காளைகள் தன் இரு ..வழுக்கிவிடும் கொம்புகளால் தூக்கும் வீர உயிர் காளைகளை...!
சனங்க நிற்கும் எடத்திலே வீசித்தான் எரியும் அம்பு போலே வீர உயிர் காளைகளை ...
வீர தீர விளையாட்டாய்
வீர சமத்துவம் வளர்க்கும் விழாவாம் ...!
சாதி மத பேதம் ஏதுமில்லை
சாத்திரம் எதுவுமில்லை
எங்களுக்கு விரோதியுமில்லை...!
கிராமங்களில் நடக்கும் விழாவாம்
விரோதிகள் ஒழியும் விழாவாம்
ஜல்லிகாட்டு காளை விழாவாம்
உலக மகா பிரசித்தி பெற்ற திருநாளாம் ...!