ரசனை பிழை

வண்ண வண்ண மீன்களை
தொட்டியிலிட்டு ரசிப்பது
எனகென்னவோ
நம் கண்களை
சவப்பெட்டிக்குள்
வைத்து பார்ப்பது போல தெரிகிறது..

வண்ண வண்ண கிளிகளை
கூண்டில் வைத்து ரசிப்பது
எனகென்னவோ
நம் செல்ல தங்கைகளை
வீட்டிற்குள் அடைத்து வைத்து
சித்திரவதை செய்வது போலத்தான்
குறு குறுக்கிறது மனம்

இயற்கை தந்த
வெண்ணிலவை
வீட்டு கிணற்றுக்குள்
சிறைவைத்து ரசிக்கலாம்...

இறைவன் தந்த
வேற்று உயிர்களை
சிறையிட்டு ரசிப்பது
சிந்தனைக்கு தகுமோ?

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (9-Feb-13, 9:56 am)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
பார்வை : 107

மேலே