நீளும் பயம்.............
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்க்கையை எழுதிச் செல்லும் பக்கங்கள்
தீர்ந்துவிட்டதாய் எண்ணப்பட்டு
மரணத்தின் கருப்பையில் நுழைய முனையும்
கற்பனைகளின் எத்தனங்கள்
மறுதலிக்கப்பட்டு
மீண்டும் வாழ்க்கைக்குள் துப்பப்படுகிறேன்.
எச்சிலின் நூல் தொடர்பாய்
இன்னும் தொற்றிக் கொண்டே இருக்கிறது
மரணம் பற்றிய எதிர்பார்ப்பு.............