காதல்

உதட்டோர புன்னகை..
என்னை உன்னிடம் இழுக்கும் காந்த சக்தி...

உதட்டோடு முத்தம்...
உன்னிடமே ஓட்டவைத்துக்கொள்ளும் வாய்ப்பூட்டு..

உடை..
காதலில் மனிதனின் முதல் எதிரி...

இருட்டு..
உன் தேகத்தை காட்ட மறுக்கும் உன் கையாள்..

கட்டில்..
நம்மை உருட்டி விளையாடும் நான்கு கால் பரமபதம்..

காதல்..
அனைத்து பிறவியிலும் எனக்குத்தனோ நீ என்ற ஆர்பரிப்பு.....

நிம்மதி...
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததைப் போல்.. அதை விட..

தூக்கம்...
கனவிலும் காதல் தொடர ஒட்டிய உடலோடு...

விடியல்..
மீண்டும் அதே உதட்டோரப் புன்னகையோடு...

எழுதியவர் : இளம்பரிதி (9-Feb-13, 5:34 pm)
சேர்த்தது : இளம்பரிதி
Tanglish : kaadhal
பார்வை : 122

மேலே