கலைந்து போன(அ)வளின் கனவு

கனவை தேடி
அலைந்து கொண்டிருந்தாள்
ஒரு தேவதை...

தெருவின் ஓரத்தில்..
பருவத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது..

ஒற்றை மர நிழலில்..
பாசத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

மணல் திட்டுக்களில்...
பாதியில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...
எதுவுமே அளவுடையது இல்லை...

கடல் தாண்டும் கனவு
துளிர்த்திருந்தது....
ஆனால்
கனவுடன் கடல்
விளையாடிக்கொண்டிருந்தது...

கடலின் அலைகளுக்கிடையில்
கனவுகள்
தத்தளித்துகொண்டிருப்பது தெரிந்தும்,
அவளது கனவு
நீந்தி போக நினைத்திருக்ககூடும்..

கடலின் கரையில்...
பயணத்தில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

இதுவாக இருக்கலாம்..
உதவி கேக்கவும்
இந்த பாதையில் ஒருவரும் இல்லை...

கனவினை அழைத்துப்பார்த்தாள்
எழுந்து வருவதாய் இல்லை...
கனவினை அழைத்துப்பார்த்தாள்
திரும்பி வருவதாய் இல்லை..

கலைந்து போன(அ)வளின் கனவு
காணாமல் போயிருந்தது...

தமிழ்நிலா

எழுதியவர் : தமிழ்நிலா (9-Feb-13, 8:31 pm)
பார்வை : 155

மேலே