...........நேர்த்தியாளன்..........
ஊசியை தோலில்தைத்து,
நொடிநேரத்தில் உருவி முடிச்சிட்டு,
லாவகமாய் தையல்முடிவை கடித்து,
முடிச்சிட்டு முறையாய் வெட்டியெறியும்,
செருப்புதைப்பவனின் நேர்த்தியின் முன்னே,
இயந்திரங்கள் கொஞ்சம் நகர்ந்துதான் நிற்கவேண்டும்,
என்று தோன்றவைத்தது ஏதோவொன்று,
இது என்ன இவன் பிறவித்திறமையா?