காதல் மாத்திரை பெப்ரவரி14 {{{இமாம்}}}
உடல் செத்து கிடக்கும்
என் உயிர் உணர்வின்றி விழித்திருக்கும்
உன்னையே மனம் நினைத்து ஓலமிடும்
சத்தம் வெளி வராமல் உள்ளடங்கி இருக்கும்.
தாகத்தில் உதடுகள் வறண்டு கிடக்கும்
ஆனால் வயிற்றை உன் சோகம் நிறைத்திருக்கும்.
என் காதலை மீண்டும் உணர்த்த உள்ளம் முயற்சிக்கும்
உன் தாலிக்கயிறு கண்டு கை கன்னத்தில் அடித்துக் கொள்ளும்.
என்னைப் புரிந்தவள் நீ மட்டும் தான்
ஆனால்
எம் காதல் வரலாற்றை இன்று உலகமே படிக்கும்படி ஆக்கிவிட்டாய்.
காதலிக்கத் தெரிந்தவள் நீ
காதலை கலகமாக்கி மகிழ்ந்தவள் நீ.
உன்னை வீணாக என் மனம் சந்தேகிக்கும்
ஏன்
உன் கணவனோடு கட்டிலறையையும் சேர்த்து
புலம்பிக் கொள்ளும் என்னை பைத்தியகாரனாக என் தங்கை சொன்னாலும் பரவாயில்லை.
நீ அதை ஊருக்கே விபரித்து சென்று விட்டாய் உலகத்துக்கே சேதியாக்கினாய்.
காதலித்தவன் என்ன ஆனான் என்று ஒரு நொடி உணருமா உன் உள்ளம்.
கணவனோடு ஒரு நொடி வீணாக்காமல் அலையுமா உன் ஆசைகள்.
நானும் மனிதனே எனக்குள்ளும் இதயம் தான் உள்ளதடி.
எம் காதலில் ஒரு குறையும் இருக்கவில்லை உன் கண்ணை தான் திருத்த வேண்டுமடி.
நான் உண்மையில் பரதேசி ஆனேன்
உன் சந்தோசத்தின் மத்தியில் உன்னை நினைத்த பகடைக் காய் நான் தானே.
உயிரோடு செத்து இருக்கும் என்னை
நினைத்துப் பார்க்க ஒரு காலம் வராதா?
ஒன்றில் மட்டும் நான் மூளைசாலி
என்னை
நினைத்துப் பார்க்கும் பெப்ரவரி 14 நிச்சயம் உன்னை ஊடறுத்து செல்லுமடி.
என்ன தான் செய்தாலும் என்னவள் நீதான் கண்மணி.