ஓர் அகதி குழந்தையின் குமுறல்...
என் தகப்பன் ஓர் போர் வீரன் அல்ல...
என் அன்னை ஓர் போராளி அல்ல...
என் குடும்பம் போரில் ஈடுபடவில்லை...
ஆனால் இறந்தது போரில்..
காரணம் அறியாமலயே ..
ஆன்மாக்களும் பிரிக்கப்பட்டது
அறிவிக்கபடாமலயே...
என்னை தூக்க வேண்டிய தோள்களை கேட்டேன்...
தொலைந்து போனதாம்...
கட்டி அணைக்க இருந்த கரங்களை கேட்டேன்
கரைந்து போனதாம்...
ஒன்று மட்டும் உறுதி...
அவர்கள் சிதைக்கபடவில்லை..
செதுக்கப்பட்டு இருக்கிறார்கள்...
அவர்கள் புதைக்கப்படவில்லை...
விதைக்கபட்டு இருக்கிறார்கள்...
மீண்டும் எழுப்பபடுவார்கள்
எங்களை காக்க....
....