காதலர் தினம்

நிறங்களை மலர்களில் மட்டும் பிரியுங்கள்
நிஜத்தில் மனங்களைப் பிரித்துப் பார்க்காதீர் !
காதலர் தினம் காதலிக்கும் உள்ளங்களுக்கு
காலத்தை கடத்திட காதலிப்பவர்க்கு அல்ல !
உள்ளத்தை காதலிக்கும் நெஞ்சங்களை விட
உடலை காதலிக்கும் உயிர்களே அதிகம் !
நான் நடத்திய கருத்தாய்வு இல்லை இது
நாளேடுகளில் வந்திடும் செய்தி தொகுப்பு !
காதலர் தினம் கலாசார சீரழிவென ஒருசாரார்
காதல் திருமணம் காலத்தின் கட்டாயமென மறுசாரார் !
அவரவர் முடிவுக்கே விடுகிறேன் முடிவெடுக்க
அவசர வாழ்வில் யோசிப்பவரைத் தேடுகிறேன் !
காதலிக்கும் உள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்
காதலிப்பதை தொடருங்கள் மணமும் முடித்தால் !
காதலிக்க வயதுஒரு தடையில்லை நம் நாட்டிலே
வரம்பில்லா காட்சிகள் திரையிலே , சாலையிலே !
மணமேடை கண்டிடும் காதலர்கள் குறைவுதான்
வீரநடை வசனம்பேசி மாய்பவரே அதிகம்தான் !
களத்தில் இருக்கும் காதலர்க்கு கரைசேர வாழ்த்துக்கள்
காதலை அறிந்திடா அனைவருக்கும் இனிய நல்
வாழ்த்துக்கள் !
பழனி குமார்