உடல் குண்டாவதை தவிர்க்க ...?

டாக்டர் செஸ்கின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக சக்தி கொண்ட உணவை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் குறைந்த சக்தியை அளிக்கக்கூடிய காளான் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் குண்டாவதை தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 நாட்களுக்கு மாட்டிறைச்சி அல்லது காளான்களை பலருக்கு உணவாக அளித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உணவில் கலோரி அடிப்படையில் காளான்களையும், இறைச்சி உணவையும் அளித்து நடத்திய சோதனையின் அடிப்படையில் காளான் உணவு வகைகளால் உடல் எடை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே `ஸ்லிம்' ஆக இருக்க விரும்புவோரே! அதிக அளவு காளான் உணவு வகைகளை உண்ணுங்கள்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (13-Feb-13, 6:17 am)
பார்வை : 223

மேலே