நூறு வரை காதல் வரும்

காதலர் தினத்திற்கு ஒத்திகையும் ஒப்பனையும்
நடந்து கொண்டிருக்கும். கவிதை பட்டறையில்
இன்று ஓவர் டைம் . ஆனால் காதலிக்க
நேரமில்லை என்பவர்களும் இருக்கிறார்கள்.

காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை

பஞ்சணையும் கண்டதில்லை
பால் பழம் குடித்ததில்லை
வஞ்சி உன்னை காணும் வரை
மனசும் துடித்ததில்லை

பஞ்சுபோல் நரை விழுந்து
பார்வையும் குழி விழுந்து
ரெண்டும் கெட்ட வேளையிலே
கண்டேனே உன்னையடி ..

காயிலே சுவைப்பதில்லை
கனிந்தபின் கசப்பதில்லை
நோயில்லா உடல் இருந்தால்
நூறு வரை காதல் வரும்

மாமியார் கொடுமை இல்லை
மாமனார் யாருமில்லை
இந்த சாமியை மணமுடித்தால்
சந்தோஷம் குறைவதில்லை

அவ்வுலகம் சென்று வந்தேன்
அமுதம் குடித்து வந்தேன்
பொன்னுலகம் போவதற்கு
புது உடல் வாங்கி வந்தேன்
இந்திரனை கண்டு வந்தேன்
இதுபற்றி கேட்டு வந்தேன்
சந்திரனைக் கண்டு வந்தேன்
சரசம் நடத்த வந்தேன்

காதலிக்க நேரமுண்டு
கன்னியுண்டு காளையுண்டு
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமுண்டு
லாலலா லாலலல்லா
லாலலா லாலலல்லா

கவிக் குறிப்பு : ஸ்ரீதரின் ஆல் டைம் கிளாசிக்
"காதலிக்க நேரமில்லை " படத்தின் டைட்டில்
பாடல். கிழ வேடமிட்ட கதாநாயகன் காதலியை
டீஸ் செய்கிற மாதிரி அமைந்த பாடல் .
வலையில் சொடுக்குங்கள் கிடைக்கும்
எந்தத் தலைமுறையினரும் ரசிக்கக் கூடிய
இனிய படம் . பாடல்கள் எழுதியவர்
கவியரசர் கண்ணதாசன்.

எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன் (13-Feb-13, 10:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 292

மேலே