காதலர் தின சிறப்பு கவிதை
இது நம் மழை காலம்
_____________________
இது நம் மழைக்காலம் -
என்னைபோலவே -
நீயும்
எங்கோ
நனைந்துக் கொண்டிருகிறாய்...
இந்த ஜென்மதிலில்லை ...
பூர்வ ஜென்மத்திலும்
நனைந்தபடி காதலித்தோம்
என்பதை
நினைவுபடுத்தியதும்
இதே மழைதான்..
உன்னை கண்டுபிடித்ததும்
இந்த மழைதான்..
டாண்டிலியன்கள் பூத்த
தேம்ஸ் நதிக்கரையில்
இரு அன்னங்களாக
வாழ்கையில்-
மழை சாரல் நம்
சிறகுகளில்
குளிர்ந்து
சிலிர்த்தது ...
நினைவில்லையா?
குலோப் அரங்கின்
வாயிலில்
ஷேக்ஸ்பியரின்
வரிகளை
மாறி மாறி முனகியபடி
கட்டிக்கொண்டு
தெப்பலாக
நனைந்திருந்தாமே
நீயும்.. நானும்...
பிறிதொரு மழைகாலத்தில்...
மறந்துவிட்டாயா?
கண்டேன் ..
கண்டெடுத்தேன்..
மழையூடே...நனையுமபோதே ..
இச்சென்மத்திலும் .
நீ..
நீயே தான் .
என்
அதே காதலியென்று !
பெயர்தெரியா பறைவையாய் ..
உற்று நோக்கும் பாவனையில்
உன்னையே கண்காணிக்க.....
யாருமில்லை என்ற நினைப்பில்
நீ..
மழைசாலையில்-
இரு கைநீட்டி
ஆடை சுழற்றி
வானம் பார்த்து
ஆடுகையில்.
எதிர்பாரா
என் சிரிப்பொலியில்
பயங்கொண்டு
ஓடி ஒளிந்தாய்
உன் வீட்டிற்குள் ...
ஒரு சதங்கையை
தவற விட்டபடி...
மழையில் நனைந்த
வானவில்லாய் ....
பாதி கதவிடுக்கில் வெட்கிய படி நீ..
சதங்கையை உன்னிடம் நீட்டும் அந்த சனம்
இடியோசையில் மிரண்டு ..
சட்டென்று கட்டிகொண்டாய் ....
பயம் வேண்டாம்
என் ஒற்றை மழைத்துளியே!
வானம் உன் பெயர்கூறி
அழைத்தது..
என் சார்பாக...
அஞ்சாதே.. என் மின்னலே!
எனகூறு கையில்
நனைந்த புறாவாக
என் தோள் சரிந்தாய் ....
உன் வெப்பம் உணர்ந்த
அப்பொழுதில் என்
முத்தத்தை
அல்லவா தரமுடியும்
மழையின் சார்பாக....
பாலையாய்
இருந்த என் வாழ்க்கையில்
மழை பெய்வித்த
மொன்டானா விஞ்ஞானியா நீ ..
பில் தூரன்
மலையில் விழுந்த
மழைத்துளி நம் மீது
எப்போதும் விழாமல் போகட்டும்..
என் ஸ்ரினின் சிலையை
என் கண்கள் முழுதாய் செதுக்கட்டும்
வாழ்நாளெல்லாம்....
இந்த நிஜாமியின் மழைக்காதல்
நிஜமானது.......
மழை உள்ளவரை-
இப் பூமியில்-
நம் காதல் வாழுமல்லவா என் கண்ணே !