தெய்வத்தால் ஆகா(தெ) எனினும் ......

வெற்றி மட்டுமே
வாழ்க்கை என்றால்.....
இன்பம் இருக்காது....

வளைவுகள் இல்லாமல்...
இங்கே.....
ஓவியம் பிறக்காது...

வண்ணங்கள் அவன் கையில் ....
ஆயினும் ...
தூரிகை உன் கையில்....

வளைந்தாலும் வலித்தாலும்...
வரையத் தயாராயிரு....
.
தடுத்தாலும் கெடுத்தாலும்....
வளரத் தயாராயிரு.....

விருட்சமாய் இரு....
இன்றேல்..
வெளிச்சமாய் இரு....

உன் மேல்.....
கல் எறிந்த போதும்....
கனி கிடைக்கும்...

உன்னை பூட்டி
வைத்த போதும்.....
உன் கீற்றுகள் கீறும்....

'எழுவேன்' என்பதே....
நம் மந்திரமாகட்டும்......
பத்து விழிகளேனும் கலங்கிட....
நம் மரணம் நேரட்டும்....

எழுதியவர் : (18-Feb-13, 12:14 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 172

மேலே