இது இயற்கை காதல்.....

இயற்கையும் இறைவனும்
கொஞ்சிக் குலவும்...
உலகமே இங்கு
காதலர் கழகம்....

ஊடலின் உரிமையும்
கூடலின் குளுமையும்
கண்ணெங்கும் காட்சியாய் விரிந்தும்...
உணர மறுப்பதென்ன?

அள்ளி முடித்த
வெள்ளிக் கூந்தலை ...
கொஞ்ச இடைஞ்சலென...
இறைவன் தள்ள....
துள்ளி விழுந்ததோ....? அருவி?
ஒவ்வொரு ஊடல் முடியும் போதும்....
மூச்சு முட்ட முத்தம் குடித்த பின்
சிந்திய எச்சிலோ ......? மேகங்கள்?

அவள் அங்கங்களெங்கும்..
அங்கங்கு அவன் பதித்த......
அடையாள முத்தங்களோ....? நட்சத்திரங்கள்?
கலைந்த வெள்ளை பொட்டோ....? வெண்ணிலா?

சண்டையிட்டு பிரிந்த போதெல்லாம்...
அவன் அன்பை சொல்ல ...
அனுப்பிய நீல(நீள) மடல்களோ...? கடல்கள்?
எழுதும் எழுத்துக்களோ .....? அலைகள்?

அன்பின் சாட்சியாய்....
அத்தாட்சியாய் நிற்கும்
ஒற்றைக்கால் மனிதர்களோ ...? மரங்கள்?
உறவுகளோ .....? பசுமை?

விழி வழி வரும்
அன்பின் வலி உணர்த்தும்
துளியோ .....மழைத்துளி?
புன்னகையோ .....பகல்கள்?

தீராத காதலும்
முடிவில்லாக் கவிதைகளும்...
இன்னும் இருக்கவே செய்கிறது...
இயற்கைக்கும் ...எனக்கும்..

எழுதியவர் : (18-Feb-13, 12:05 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 109

மேலே