திருவாளர் பொதுஜனம் சாலையில்....
1.இருசக்கர வாகனம் இருக்கும் ஆனால் ஓட்டுநர் உரிமம் இருக்காது
2.வாகனத்திற்கான இன்ஸ்சூரன்ஸ் இருக்கவே இருக்காது
3.ஹெல்மட் பயன்படுத்துவது பாவமென்றே பெசப்படும்
4.ஒன்வேயை இருவழியாகப் பயன்படுத்துவதில் எந்த வெக்கமும் இருக்காது.
5.நேரத்திற்கு பேருந்து நிலையத்திற்கு வருவது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும்.
6.பேருந்து என்பது....நினைக்கும் இடத்தில் ஏறி...நினைக்கும் இடத்தில் இறங்க ஏதுவாக இருக்க வேண்டும்.
7.நடைமேடை என்பதும்...சுரங்கப் பாதை என்பதும் யாருக்கோ... எதுக்கோ இருக்கிறது.
8.பெட்ரோல் தீரும் வரை அது பற்றிய கவலையே இருக்காது.
9.சாலையே...சிறு கழிப்பிடம்.
10.வாகனம் நிறுத்துமிடம் என்பது... வாகனம் தவிர மற்றவைக்கானது.