விளம்பர இடை வேளை.....

சின்னதும் பெரிதுமாய்
நாற்காலியிலும்
மெத்தையிலும்
அமர்த்தி வைக்கப்பட்ட
ஆறேழு பிணங்கள்
இருக்கும் வீட்டில்
ஒரு தகவல் சொல்லி வருகிறேன்...
உள் நுழைந்த போதும்
வெளியேறிய போதும்
அவைகள் என்னைத் திரும்பிப் பார்த்தன…!
தகவலை
ஆவணமாகக் கொடுத்ததினால்
அதுகளுக்கு
உயிர் வரும் நேரத்தில்
பார்க்கப்படலாம்...
தொலைக்காட்சிகள் வாழும் வீட்டில்
விளம்பர இடைவேளைகள் தான்
இன்னமும்
மனிதர்களுக்கு மனிதர்களை
அடையாளம் காட்டிக்கொண்டிருக்கின்றன...!

எழுதியவர் : ஆண்டன் பெனி (18-Feb-13, 2:39 pm)
பார்வை : 184

மேலே