!!!! கருகிய கதை !!!!!
முகத்தில் சிரிப்பும்,
நெஞ்சில் வஞ்சகமும் கொண்டு
பகைத்து நின்ற
காலங்கள் சென்று..,,
வஞ்சக வார்த்தைகள்
சிரிப்பென்னும் போர்வைக்குள்
ஒளிந்து நடமாட..,
அதையறியா,
வஞ்சக வறுமை கொண்ட இதயம்,
கள்ளமற்று,
கார்மேக நீரென்று நினைத்து,
கானல்நீரை எதிர் கொண்டு
காத்திருக்கும் இளந்தளிராய் நிற்க,
குருத்தொன்று விடும் முன்னரே
கருகிய நேரம்
கதறிய கதை இது!!!!!