அதிசிறந்த இனிப்பு

என் முன்னே உலகின்
அத்தனை இனிப்பு வகைகளையும்
வைத்துவிட்டு கேட்டார் அவர்.
இதில் அதிசிறந்த இனிப்பு எதுவென்று?
அத்தனையும் சுவைத்துப் பின்
என் நினைவுகளைத் தொட்டது இதுதான்
என் இளம் வயதில்
எங்கள் உறவினரின் திருமணத்திற்கு
என்னை வீட்டில் விட்டுச் சென்று திரும்பும்போது
இலையில் வைத்த பால்கோவாவை
அவளின் கைகுட்டையில் வைத்து
எனக்காக எடுத்துவந்தாளே என் அன்னை...!

எழுதியவர் : அலெக்சாண்டர் (21-Feb-13, 11:42 pm)
பார்வை : 169

மேலே