அமிழ்தமிழ்தென் தாயே,,,, (உலகத் தாய்மொழி தினத்திற்காய்)

அமிழ்தமிழ்தென் தாயே,,,,
(உலகத் தாய்மொழி தினத்திற்காய்)

தேடுகிறேன்
அறியா பருவத்தில்
அறிந்திரவில்லை,,
அருமை அறிந்தபின்
தேடுகிறேன் தாயே

கனவிலும் நீ
நினைவிலும் நீ
நடையிலும் ,,நீ
நால்புறமும் நீ,,,
நிறைப்பதும் நீ
நிழலாவதும் நீ,,
நிலையாவதும் நீ
உயிர்நிலையாவதும் நீ
சிந்தனையும் நீ,,,
இயற்கையும் நீ
இனிமையாய்
இப்படி அனைத்திலும் நீ

நான் என்செய்தேன் உனக்கு
இப்படியொரு பிறவியளித்தாய்
அழகியத் தமிழ் மகனாய் அம்மா

தாய் வேறில்லை நீ வேறில்லை
தாய்மைக்கே ஆணிவேர் நீயன்றோ
இயலிசை நாடகம் கண்டேன்
இதிலல்லவா உன் மகத்துவம் கண்டேன்

சிரம் தாழ்வதும் உனக்கே
அகம் நெகிழ்வதும் உனக்கே
அன்பு கொள்வதும் உன்னால்
அடங்கிப் போவதும் உன்னால்
அனலெனக்கொதித்தெழுவதும் உன்னால்
நீரின்றி அணைவதும் உன்னால்

அணைத்துக்கொள்ளும் போர்வையும் நீயே
அழித்தெழுதும் பிழையும் நீயே
அச்சுறுத்தும் மனசாட்சியும் நீயே

என் கவிதைப் பாதையில்
காதலிலும் நீயே
கற்பனைகளிலும் நீயே
உணர்வுகளிலும் நீயே
மரபிலும் நீயே
எளிமையிலும் நீயே
புதிதும் நீயே
புதுமையிலும் நீயே
இதயமாய் நீயே
இறப்பிலும் நீயே
இனியொரு பிறவியென்றால்
அதிலும் நீயே என் தாயே ,,,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (22-Feb-13, 2:09 pm)
பார்வை : 167

மேலே