மழையிலென்ன நல்லமழை கெட்டமழை..!

விவசாயம் செழிக்க பெய்யும் மழை நல்லமழை
விவசாயத்தையே வெள்ளத்தால் அழிக்கும் மழை கெட்டமழை

குடையோடு செல்லும்போது தூவும்மழை நல்லமழை
தீடிரென்று நடுவழியில் பெய்து நனைக்கும் மழை கெட்டமழை

விடுமுறையில் பொளந்துகட்டி பெய்யும்மழை நல்லமழை
அலுவல் செல்லும் வேளையிலே அவசரமாய் பெய்யும்மழை கெட்டமழை

பூக்களுக்காய் பூக்களைப்போல் அனுசரித்து பெய்யும்மழை நல்லமழை
நாட்கணக்காய் கலங்கடித்து ஊரையே நாறவைத்து செல்லும்மழை கெட்டமழை

காதலியோடு ஒரே குடையின்கீழ் செல்லும்போது பெய்யும்மழை நல்லமழை
கர்நாடகாவில் பெய்துவிட்டு தமிழ்நாட்டை கைஏந்தி(ஏங்கி) நிற்கச்செய்யும்மழை கெட்டமழை!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Feb-13, 2:42 pm)
பார்வை : 115

மேலே