வளம் பெற களம் காண்பது எது.?
வளம் பெற களம் காண்பது எது.?
*************************************
பிறரால் பெறப்படுவது நிம்மதி இல்லை,
அது சன்மானம்…
சன்மானம் பெற்றுக்கொன்டால்,
ஓர் தலைமையின் கீழ் நீயாவாய்
உன்னை உன்னால் ஆளப்போவது
எப்போது …!?
நேற்றைய மனிதனின் ஓட்டமும்.,
இன்றைய மனிதனின் ஓட்டமும்..,
நாளைய மனிதனின் சுவடாகுமா…
அப்படியெனில்.:-
செக்குமாடுகளாய் சுற்றிவருகிறோமா?
உன் பசி எப்போது…
உன் உறக்கம் எப்போது…
உன் தாகம் எப்போது..
இதை அடுத்தவன் மூலமா பெற முடியும்.
ஒருவரின் சிந்தனையில் உலகம் செல்கிறதா……!?
தன்னம்பிக்கை என்பது வேண்டும் என்கிறார்கள்…!
யாரிடம் பெற்றது...
யாரிடம் பெறுவது…
எவரைக் கொண்டு எதற்க்கு சான்றிதழ் பெறுவது
எனக்கு விழிப்பு வரும் போது
அடுத்தவனுக்கு உறக்கம் வருகிறதே..
எனக்குரிய தேவைகளை யார் மூலம் தேடுவது..
என்னுடைய கிறுக்கல்களே மொழியாகி
அடுத்தவனுக்கு பாடமாகும்போது அங்கேதான்,
தன்னம்பிக்கை ஜெயிக்கிறதா…?
மாறும் காலபோக்கே மனிதனை மாற்றுகிறது.
அடுத்தவனின் தடுமாற்றமே தன்னம்பிக்கை கொள்ள செய்கிறது.
நாளும் உறங்கியே தீருவேன் என்றால்
தன்னம்பிக்கையால் பகலையே
தடுத்துவிட முடியுமா…?
தன்னம்பிக்கையின் காலவரையறை
அடுத்தவருக்கா…?
எனக்கா…?
வரையறையற்ற வாழ்வு மாற்றங்களுக்கா….?
தீர்மானிப்பது எதை…
சிந்தனையில் வைத்து செயல்களை புரிவோம்….
வெற்றி நமக்கே…!